வீட்டை விட்டு வெளியேறிய மனைவி... கோவில் முன் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்..!
திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே திருமலைக்கேணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிரிவலப்பாதையில் நேற்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் இறந்து கிடந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், உடல்கள் அருகே கிடந்த பையை போலீசார் கைப்பற்றினர். அதில் ரேஷன் கார்டு ஒன்று இருந்தது. அந்த கார்டில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் என்று இருந்தது.
விசாரணையில் இறந்த பெண், நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் மனைவி வித்யா (26) என்பதும் அவருடன் இறந்த நபர், வாடிப்பட்டி அருகே உள்ள தாதன்பட்டியை சேர்ந்த சப்பாணி மகன் மணி (32) என்பதும் தெரிய வந்தது. மணி சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மணிக்கும், வித்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இவர்கள் கள்ளத்தொடர்பு நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இருவரும் மீண்டும் சேரமுடியாதோ என்ற அச்சத்தில் வீட்டை வெளியேறி திருமலைக்கேணி முருகன் கோவில் அருகே இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.