திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனை புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 

கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அரண்மனை புதூரை சேர்ந்தவர் மணிகண்டன் (26). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (23) என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு தேன்மொழிக்கும், அவசரம் அவசரமாக கோவையை சேர்ந்த முரளி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் கோவை போத்தனூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகும் காதலை மறக்க முடியாத தேன்மொழி, மணிகண்டனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். 

இதையும் படிங்க: தண்ணீர் கேட்ட உணவு டெலிவரி பாய்! கிச்சனுக்கு சென்ற பெண் என்ஜினீயர் அலறல்! நடந்தது என்ன?

இதனை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி தேன்மொழி, தனது கணவரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் தேன்மொழி, தனது காதலன் மணிகண்டனை கோவைக்கு வரச்சொல்லி அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார்.

இதையும் படிங்க: சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

காதலில் ஒன்று சேர முடியாத வேதனையில் இருந்த இருவரும் நேற்று இரவு ரெட்டியார்சத்திரத்தை அடுத்த பலக்கனூத்து பகுதியில் உள்ள தண்டவாளத்துக்கு வந்துள்ளனர். அப்போது சென்னை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.