பயங்கர சத்தத்துடன் கார் டயர் வெடித்து விபத்து... 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

பழனி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Dindigul Car accident...4 people killed

பழனி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலிருந்து உடுமலை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கார் கரடிக்குப்பம் பகுதியில் செல்லும்போது திடீரென பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்தது. இதனையடுத்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. 

Dindigul Car accident...4 people killed

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே  உடல்நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 4 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios