திண்டுக்கல் அருகே கடன் பிரச்சனையால் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே கடன் பிரச்சனையால் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து மேட்டூர் காலனியைச் சேர்ந்தவர் மணி (31). இவர் திண்டுக்கல்லில் கட்டுமானம் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். தற்போது கவுரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கட்டுமானம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் மணி கடன் வாங்கி வந்துள்ளார். 

இதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் ஏற்பட்டு மணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.