இந்த கொடுமையை எங்க போய் சொல்ல.. இதயக்கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் துடிதுடித்து உயிரிழப்பு.!
தருமபுரி அருகே இதயக்கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே இதயக்கோளாறுக்கு பெருச்சாளியை சமைத்து சாப்பிட்ட பெண் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே மூலக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சரிகா (30). இவர்களுக்கு, 8 வயதில் ஒரு மகள் உண்டு. இந்நிலையில், சரிகா கடந்த 5 ஆண்டுகளாக இதய கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு சிகிச்சை வகையான சிகிச்சைகள் பெற்று வந்தார். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, நாட்டு வைத்தியம் பார்த்த ஒருவர் பெருச்சாளி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமடையும் எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய, சரிகா பெருச்சாளியை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி வீட்டின் அருகே மயக்க நிலையில் பெருச்சாளி ஒன்று கிடந்துள்ளது. அதனை பிடித்து, சரிகா சமைத்து சாப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். ஆனால், அவரது உடல் நிலை மோசடைந்ததால் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.