வாக்குச்சாவடி மாற்றம்... திடீரென தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்...!
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.
தருமபுரி அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தில் வாக்குச்சாவடி மாற்றி அமைத்ததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே செல்லம்பட்டி பஞ்சாயத்தில் வாக்குச்சாவடி மாற்றி அமைத்ததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தல்களில் கோணம்பட்டி கிராமத்தில் சங்கிலிவாடி பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்து வாக்களித்து வந்த நிலையில், தற்போது நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையம் மாற்றி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.