Asianet News TamilAsianet News Tamil

15 நாட்களாக தண்ணீர் வரவில்லை; அரூர் அருகே பெண் மடிபிச்சை ஏந்தி போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த 15 நாட்களாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Public road blocking protest for supply of drinking water in Dharmapuri vel
Author
First Published Feb 20, 2024, 5:23 PM IST

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள சமத்துவபுரத்தில் 100 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் மக்களுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் பணியாளர்கள் உட்பட அனைவரும் தண்ணீருக்காக தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் அரூர் - கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் கிராமத்தில் நுழைவாயிலில் கற்களை வைக்கப்பட்டு செல்லும் வழியை அடைத்தனர். தகவலறிந்து வந்த காவல்  மற்றும் வருவாய்த் துறையினர் இங்குள்ள பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறப்பான வேளாண் நிதிநிலை அறிக்கை - வைகோ பாராட்டு

அப்போது பெண் ஒருவர் தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி என  மடிபிச்சை ஏந்தினார். இதனைத் தொடர்ந்து ஒரு மூதாட்டி துணி துவைக்க கூட தண்ணீர் இல்லை சார் என இரண்டு பையில் துணிகளை எடுத்து வந்து காவல்துறையினர் முன்பு சாலையில் வைத்தார். பின்பு ஆழ்துளை கிணறு பழுது ஏற்பட்டதால் குடிநீர் வழங்குவதற்கு தாமதமாகி உள்ளது. எனவே உடனடியாக இதனை சரி செய்து பழுதுகளை நீக்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதாக கொடுத்த உத்தரவின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

என்னோட சாவுக்கு கலெக்டர் தான் காரணம்; ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு

அப்போது சமத்துவபுரம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதில்லை, இதனால் இரவு நேரத்தில் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் அவதிப்படுவதாகவும், சமத்துவபுரத்திற்கு என அரசு நியாய விலை கடை இருந்தும் பொருட்கள் விநியோகம் செய்வதில்லை இப்பொருளை வாங்குவதற்காக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நியாய விலைக் கடையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தனர். 

குடிநீர் வழங்க வேண்டி நடைபெற்ற இந்த சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios