சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் அவரது சகோதரரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தீப்பாஞ்சி (வயது 40). ஐடிஐ படித்துவிட்டு பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 15ம் தேதி நல்லம்பள்ளி, சேலம் தர்மபுரி சாலையில் ஒரு தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீப்பாஞ்சி நேற்று இரவு மூளை சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் சரவணனின் விருப்பத்தின் பேரில் தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் தலைமை மருத்துவர் முருகேசன் தலைமையில் மருத்து குழு அவரது இருதயம், கணையம், கல்லீரல், கிட்னி ஆகிய நான்கு உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது.! இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் அதிர்ச்சியில் மீனவர்கள்
எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் சேலம், ஈரோடு, ஆகிய மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் மூளைச்சாடு அடைந்த தீபாஞ்சியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.