அதிர்ச்சி.. திருமணமான 15 நாளில் மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா?
திருமணமான நாளில் இருந்தே பிரியங்காவும், மதன்குமாருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவரிடம் பிரியங்கா சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் பிரியங்கா நாளடைவில் சரியாகி விடுவார் என மதன்குமார் நினைத்து வந்தார்.
திருமணமான 15 நாட்களில் இளம்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் பிரியங்கா (31). இவருக்கு சாமனூரை சேர்ந்த மதன்குமார் (33) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான நாளில் இருந்தே பிரியங்காவும், மதன்குமாருக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவரிடம் பிரியங்கா சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இருப்பினும் பிரியங்கா நாளடைவில் சரியாகி விடுவார் என மதன்குமார் நினைத்து வந்தார்.
விருந்து
இந்நிலையில், நேற்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அனுமந்தபுரத்தில் உள்ள மதன்குமாரின் பெரியம்மா சென்னம்மாள் என்பவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு புதுமண தம்பதிகளான மதன்குமாரும், பிரியங்காவும் விருந்துக்காக சென்றிருந்தனர். அங்கும் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பிரியங்கா கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
புதுப்பெண் தற்கொலை
இந்நிலையில் நேற்று இரவு பிரியங்கா சென்னம்மாள் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், அங்கிருந்த இரும்பு கம்பி மீது பிரியங்கா தலை மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிரியங்கா உயிரிழந்தார்.
வழக்கு பதிவு
இந்த சம்பவம் குறித்து புதுப்பெண் பிரியங்காவின் குடும்பத்தினர் காரிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 15 நாளில் மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.