Asianet News TamilAsianet News Tamil

திடீரென களத்தில் இறங்கி குப்பைகளை அள்ளிய எம்எல்ஏ ஜிகே மணி

பென்னாகரம் பேரூராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பேரூராட்சி தலைவர் கண்டுகொள்ளாத நிலையில் பென்னாகரம்  சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தாமாக முன்வந்து குப்பைகளை அள்ளினார்.

mla gk mani did cleaning work at pennagaram constituency in dharmapuri district
Author
First Published Jun 26, 2023, 5:09 PM IST

 தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் பாமகவும், 2 வார்டுகளில் தேமுதிகவும் வார்டு கவுன்சிலராக உள்ளனர். இந்த நிலையில் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லிபுரம் சந்தப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வட்டாட்சியர் அலுவலகம், சுண்ணாம்பு காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும்  பேரூராட்சி தலைவரிடமும் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதனை தொடர்ந்து பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்  ஜிகே மணியிடம் பொதுமக்கள் குற்றம் சாட்டவே கட்சித் தொண்டர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் வீதி வீதியாக நடந்தே சென்று குப்பைகள் சாலை நெடுகிலும் இருப்பதைக் கண்டு அவரே முன்வந்து  குப்பையை அல்ல தொடங்கினார். அது மட்டுமல்லாமல் சாக்கடை கால்வாயில் உள்ள கழிவுகளை மண்வெட்டியால் வாரி அப்புறப்படுத்தினார்.

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்

இந்த நிகழ்வில் பென்னாகரம் பேரூராட்சி  தலைவர் வீரமணி, செயலாளர் மற்றும் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் குப்பை அள்ளும் பொழுதும், சாக்கடையை மண்வெட்டியால் அள்ளும் பொழுதும் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து விட்டு போட்டோவிற்கு மட்டும் போஸ் கொடுத்தனர்.

கள்ளக்குறிச்சியில் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து 3 மணி நேரம் கொடூர தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios