கிராம மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

தருமபுரியில் விலை நிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகளை பிடிக்க வனத்துறை சார்பில் ஆனைமலையில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானை வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

Makhna caught with kumkis help to be moved to Anamalai in dharmapuri

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக விலை நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வந்த காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி வெளியேற்றுவதற்காக ஆனைமலை பகுதியில் இருந்து 45 வயது கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டு பாப்பாரப்பட்டியில் தங்க வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பாப்பாரப்பட்டி பகுதியில் கிட்டம்பட்டி மலை அடிவாரத்தில் இருந்த இரண்டு காட்டு யானைகள் சஞ்சீவராயன் கோவில் வழியாக கோடு பட்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள சின்னாற்று பகுதியில் குழிப்பட்டி கிராமத்தில் இன்று காலை முகாம் இட்டுள்ளது.

 

வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்துவதற்கு ஏற்ற இடத்தில் காட்டு யானைகளை கொண்டு செல்லும் வரை வனத்துறையினர் காத்திருக்கின்றனர். இதனால் கும்கி யானையும் பாப்பாரப்பட்டியில் இரண்டாவது நாளாக தங்க வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் நகர்வை பொறுத்து கும்கி அணியும் லாரியில் ஏற்றி  காட்டு யானைகள் உள்ள பகுதியை ஒட்டி கொண்டு செல்லப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

''பொறுத்திருந்து பாருங்கள்''..! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஓபிஎஸ் அணி.?

இதனைத் தொடர்ந்து கும்கி யானையின் உதவியுடன் காட்டு யானை பத்திரமாக பிடிக்கப்பட்டது. தற்போது யானையை சாந்தப்படுத்தி பின்னர் அதனை ஆனைமலைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios