பிறந்த நாளில் சோகம்.. மாரடைப்பால் உயிரிழந்த தருமபுரி டிஎஸ்பி.. சோகத்தில் மூழ்கிய சக காவலர்கள்..!
தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றியவர் தனது பிறந்த நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றியவர் தனது பிறந்த நாளிலேயே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சீலி நாயக்கன்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். தருமபுரியில் காவல்துறையினருடன் கேக் வெட்டி எளிய முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடி முடித்தார். பின்னர், ராஜ்குமார், வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தருமபுரி மாவட்ட காவல்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.