விஷம் குடித்த காதலி.. உயிர் துடிப்பதை வேடிக்கை பார்த்த காதலன் குடும்பம்.. நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறிய தாய்

முரளிதரனும், ஞானமொழியும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்து கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்து கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில், 2 முறை ஞானமொழி கர்ப்படைந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி சரியாகப் பேசாமல் இருந்து வந்துள்ளனர். 

female engineer who died after drinking poison in front of her boyfriend house

தர்மபுரி அருகே காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டு முன்பு, விஷம் குடித்து பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ராஜகொல்ல அள்ளியை சேர்ந்தவர் காவேரியப்பன். இவருடைய மகள் ஞானமொழி (29), பி.டெக் படித்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கால், தற்போது வீட்டில் இருந்தபடி வேலை செய்து வந்தார். இவரது உறவினரான குட்டூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முரளிதரன்(33), பிஇ படித்து விட்டு, ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். முரளிதரனும், ஞானமொழியும் 13 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் விடுமுறை எடுத்து கொண்டு ஒன்றாக வெளியே செல்வதும் புகைப்படங்கள் எடுத்து கொள்வதுமாக இருந்துள்ளனர். இதில், 2 முறை ஞானமொழி கர்ப்படைந்து கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக காதல் ஜோடி சரியாகப் பேசாமல் இருந்து வந்துள்ளனர். 

female engineer who died after drinking poison in front of her boyfriend house

இந்நிலையில், முரளிதரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு முரளிதரனும் ஒப்புக் கொண்டார். இதையறிந்த ஞானமொழி, குட்டூரில் உள்ள காதலன் வீட்டிற்கு நேற்று முன்தினம் நியாயம் கேட்டுள்ளார். மேலும், முரளிதரனுக்கு தன்னை திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் இங்கேயே விஷ மருந்திவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத முரளிதரன் குடும்பத்தினர் கதவை உட்பக்கமாக தாழிட்டுக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர். 

female engineer who died after drinking poison in front of her boyfriend house

இதனால்,  விரக்தி அடைந்த அவர், முரளிதரன் வீட்டின் முன்பு ஞானமொழி விஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். முரளிதரன் குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயற்சிக்காமலும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமலும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து, உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஞானமொழியின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

female engineer who died after drinking poison in front of her boyfriend house

இதனையடுத்து, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முரளிதரன், அவரது பெற்றோர் தங்கவேல் (56), ராதா (50) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மகளின் உடலை பார்த்து மருத்துவமனை வளாகத்தில் தரையில் படுத்து அழுத ஞானமொழியின் தாய் வள்ளி எல்லோருடைய கண்முன்னே என் மகள் துடிதுடிக்க உயிரிழந்திருக்கிறாளே யாராவது முன்வந்து காப்பாற்றி இருக்கலாமே என கதறியது காண்போரை கலங்கடித்தது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios