போலீஸ்கிட்டயே லஞ்சம் கேட்ட போலி போலீஸ்…. வசமாய் சிக்கியது எப்படி?
தருமபுரி அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி அருகே வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த மருதிப்பட்டியை சேர்ந்தவர் தம்பிதுரை. சேலத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் பாதுகாவலராக வேலைபார்த்து வந்த தம்பிதுரைக்கு கொரோனா ஊரடங்கில் வேலையும் பறிபோனது. இதையடுத்து வேலை கிடைக்காமல் சுற்றிய தம்பிதுரை பணம் சம்பாதிக்க குறுக்கு வழியை தேர்வு செய்தார். தருமபுரியில் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களை நிறுத்தி தான் ஒரு உளவு பிரிவு போலீஸ் எனக்கூறி சோதனை செய்வது போல நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்துள்ளார் தம்பிதுரை.
இந்த தொழில் நல்லா இருக்குதே என நினைத்து அதையே தொடர்ந்தவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. சாலையில் செல்லும் வாகனங்களை எல்லாம் வழிமறித்து பணம் பிடுங்கிய தம்பிதுரை, ஒரு கட்டத்தில் ஒரிஜினல் போலீஸின் வாகனத்தையே மறித்து பணம் கேட்டுள்ளார். வசமாக சிக்கிய போலி உளவு போலீஸை, ஒரிஜினல் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.