ஷாக்கிங் நியூஸ்.. மதுபோதையில் தள்ளாடிய அரசு பள்ளி மாணவி.. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.!
அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, பேருந்தில் மது அருந்துவது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபோதையில் அரசு பள்ளி மாணவி சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பொது இடங்களில் சண்டையிட்டு கொள்வது, பேருந்து படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, பேருந்தில் மது அருந்துவது, ஆசிரியரை மிரட்டி தாக்குவது உள்ளிட்ட ஒழுங்கின செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்டம் இண்டூர் நிலையத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடிய படி வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலையின் மறுபுறத்தில் இருந்தாக கூறப்படும் 4 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் சாலையைக் கடக்க முயற்சித்தபோது சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் நிற்க முடியாமல் தள்ளாடிய நிலையில் சாய்ந்து நின்றுள்ளார். மேலும் சாலையைக் கடக்கும் பொழுது கடக்க முடியாமல் தள்ளாடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற 3 மாணவிகள் சாலையின் மறு புறத்திலேயே நின்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மாணவியின் மதுபோதை வீடியோவை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.