திருமண வீடு சாவு வீடாக மாறிய சோகம்.. வேப்பிலை பறிக்க சென்ற போது தாக்கிய மின்சாரம்.. மரத்தில் தொங்கிய சடலம்.!
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டி ஊராட்சி கைலாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர். இவரது மகன் ஏழுமலை. கூலி தொழிலாளி. இந்நிலையில், ஏழுமலையின் பெரியப்பா மகனுக்கு நாளை திருமணம் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பந்தலில் தோரணம் கட்டுவதற்காக வயலில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி வேப்பிலை பறித்துள்ளார்.
தருமபுரி அருகே அண்ணன் திருமணத்திற்கு பந்தகால் அமைக்க வேப்ப மரத்தில் ஏறி இலை பறித்த போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டி ஊராட்சி கைலாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர். இவரது மகன் ஏழுமலை. கூலி தொழிலாளி. இந்நிலையில், ஏழுமலையின் பெரியப்பா மகனுக்கு நாளை திருமணம் நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பந்தலில் தோரணம் கட்டுவதற்காக வயலில் உள்ள வேப்ப மரத்தில் ஏறி வேப்பிலை பறித்துள்ளார்.
அப்போது, மரத்தை ஒட்டி இருந்த மின் கம்பியின் மீது எதிர்பாராதவிதமாக ஏழுமலையின் கால் மற்றும் முதுகு பகுதியில் உரசியது. இதில், மின்சாரம் தாக்கியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரத்திலேயே தொங்கியபடி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்சாரம் நிறுத்தப்பட்டு ஏழுமலை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அண்ணன் திருமணத்திற்கு பந்தல் அமைக்க வேப்பிலை பறிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி தம்பி உயிரிழந்த சம்பவம் திருமண வீடு சாவு வீடாகி சோகத்தில் மூழ்கியது.