விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.. 61 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய ஆசிரியர்..!
தருமபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் (61) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் (61) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.
நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவம் சார்ந்த மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீட் தேர்வெழுத எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்சநீதிமன்றம் நீக்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது கனவான மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தருமபுரியைச் சேர்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசத்துக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், இன்று நடைபெறும் கலந்தாய்வில் தனது மாணவர் ஒருவருடன் அவரும் பங்கேற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 437 இடங்கள் வழங்கப்படுகின்றன. அந்த தரவரிசைப் பட்டியலில் சிவப்பிரகாசம் 349வது இடத்தை பிடித்துள்ளார்.