விளையாட்டாக மீன் பிடிக்கச்சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் பலி
தர்மபுரியில் ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுமிகள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் நார்த்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தம்மனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி, சரஸ்வதி என்ற தம்பதியின் மகள்கள் சஞ்சனாஸ்ரீ (வயது 7), மோனிகாஸ்ரீ (5). கனகசபாபதி, சரஸ்வதி இருவரும் அருகில் உள்ள விவசாய நிலத்தில் விவசாய பணிக்காக சென்றிருந்தபோது மூன்று குழந்தைகளான சஞ்சனாஸ்ரீ, மோனிகாஸ்ரீ, தமிழ் இனியன் (3) ஆகிய மூவரும் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலுள்ள தம்மனம்பட்டி ஏரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர்.
தம்பியை கரைக்கு மேலே அமரவைத்துவிட்டு இரண்டு பெண் குழந்தைகளும் ஏரியில் மீன் பிடிப்பதற்காக இறங்கியுள்ளனர். சிறுமிகள் சேறு நிறைந்த பகுதிக்கு செல்லவே சேற்றில் சிக்கி இரண்டு பெண் குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனர். வீட்டில் குழந்தைகள் இல்லாததைக் கண்ட பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்து ஏறி அருகே சென்ற போது தனியாக மூன்றாவது குழந்தையான தமிழ் இனியன் கரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டு விசாரித்துள்ளனர்.
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்; நாம் தமிழர் கட்சி தம்பிகளால் பரபரப்பான நீதிமன்ற வளாகம்
அப்போது சிறுமிகள் இருவரும் ஏரிக்குள் இறங்கியது தெரிய வந்ததை அடுத்து பெற்றோர்கள் கதறி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஏரியில் குதித்து சேற்றில் சிக்கி இருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் சடலமாக ஊர் பொதுமக்கள் மீட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வருட காதல் கம்பி நீட்ட பார்த்த காதலனை காவலர்கள் துணையுடன் கரம் பிடித்த இளம்பெண்
இந்த நிலையில் மருத்துவமனையில் திரண்ட ஊர் பொதுமக்கள், உறவினர்கள் ஒரே குடும்பத்தில் உயிரிழந்த குழந்தைகளின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.