தருமபுரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் மனைவி லதா, மகன் நீதி அபிநவ், மகள்கள் அபிநயா மற்றும் வேத ரித்திகா ஆகியோர் ஆடி பெருக்கை முன்னிட்டு காரில் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அந்த கார் இன்டூர் அடுத்த மல்லாபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது ஒகேனக்கல்லில் இருந்து தருமபுரியை நோக்கி சென்ற அதிவேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை லதா, திருமூர்த்தி, நிதி அபிநவ் ஆகியோர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் அசுரவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.