10ம் வகுப்பு தேர்வு பொறுப்பாளருக்கே கொரோனா... சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டார்..!
10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பொறுப்பாளரான தேர்வுத் துறை இணை இயக்குனருக்கு கொரானா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தர்மபுரியில் உள்ள அவரது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என்று அரசு தீவிரமாக உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய ஹால்டிக்கெட்டை தங்களின் பள்ளியில் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறையில் இணை இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தேர்வுத்துறையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. தருமபுரியில் உள்ள தனது இல்லத்தில் அவர் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இதனால், தேர்வு பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.