Asianet News TamilAsianet News Tamil

Omicron in Tamilnadu : தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி கொடுக்கும் ராதாகிருஷ்ணன்..!

காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Will omicron affect 7 more people in Tamil Nadu? Health Secretary Radhakrishnan
Author
Chennai, First Published Dec 16, 2021, 12:46 PM IST

ஒமிக்ரான் தொற்று உறுதியான நைஜீரியருடன் நபருடன் தொடரில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஒமிக்ரான் வைரஸ் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. டெல்டாவை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான். பல நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் 70க்கும் மேற்பட்டவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Will omicron affect 7 more people in Tamil Nadu? Health Secretary Radhakrishnan

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- காங்கோவில் இருந்து வந்து ஆரணி சென்ற பெண்ணுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆரணி சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி தெரிவதால் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 

Will omicron affect 7 more people in Tamil Nadu? Health Secretary Radhakrishnan

ஒமிக்ரான் தொற்று உறுதியான நைஜீரியருடன் நபருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 2 டோஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒமிக்ரான் பரவலை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Will omicron affect 7 more people in Tamil Nadu? Health Secretary Radhakrishnan

மேலும், சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 11 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 16,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios