சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் போட்டி... சிறுவர் சிறுமியர்களுடன் கண்டு ரசித்த உதயநிதி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுவர்-சிறுமியர்களுடன் கண்டு ரசித்தார். 

udhayanidhi enjoyed watching csk vs delhi capitals ipl match in chepauk with kids

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை – டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுவர்-சிறுமியர்களுடன் கண்டு ரசித்தார். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் மீது தீராத ஆர்வமும், திறமையும் கொண்ட பள்ளி மாணவ மாணவியர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் காண உதவி வருகிறார். 

இதையும் படிங்க: மின்வாரிய ஊழியர்களுக்கு குட் நியூஸ்... சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!!

udhayanidhi enjoyed watching csk vs delhi capitals ipl match in chepauk with kids

அதற்காக வட்டம் வாரியாக சிறுவர், சிறுமியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் வாங்கி கொடுத்து உதவி வருகிறார். 

இதையும் படிங்க: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்... விஏஓ கொலை வழக்கில் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

udhayanidhi enjoyed watching csk vs delhi capitals ipl match in chepauk with kids

அந்த வகையில் வட்டம் 119-ஐ சேர்ந்த 150 சிறுவர் - சிறுமியருக்கு ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்கித் தந்த உதயநிதி, அவர்களுடன் இன்று (மே.10) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை கண்டு மகிழ்ந்தார். அவருடன் சிறுவர் சிறுமியரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தனர்.   

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios