வார இறுதி நாட்களில் இளசுகளின் உல்லாசபூரியாக மாறி வருகிறது ஈ.சி.ஆர்.  அங்கிருக்கும் சொகுசு விடுதிகளில் குடியும், கும்மாளமுமாக கூத்தடிப்பது வழக்கமாகி விட்டது. 

சில விடுதிகளில், பைக்கில் வரும் ஆண்களும், முன்பின் அறியாத பெண்களும் விடுதியில் கொஞ்சி கழிப்பார்கள். ஆண்கள் ஒரு குடுவையிலும், பெண்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் குடுவையிலும் தங்களது பைக் சாவிகளை போட்டு விடுவார்கள். ஆண்கள் பெண்கள் போட்டுள்ள சாவியை எடுப்பார்கள். அது எந்தப்பெண்ணின் பைக் சாவியோ, அதனை எடுத்த ஆணுடனும், அதே போல் ஆண்களின் பைக் சாவியை எடுக்கும் பெண்கள் அந்த சாவியின் உரிமையாளருடன் சேர்ந்து கூத்தடிக்கலாம். இதில் பெண்களுக்கு இலவசம். அனைத்து பில்லும் ஆண்கள் தலையில் சுமத்தி விடும் அந்த ஹோட்டல் நிர்வாகம். 

இப்படி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து குடித்து கும்மாளமிடுவார்கள். இது காவல்துறையினரின் கவனத்துக்கு வர, ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அது குடியோடு மட்டுமின்றி உல்லாசமாக வேறொரு வடிவம் பூண்டு கலாச்சார சீரழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது. 

ஆம். துணைகளை மாற்றிக்கொள்ளும் ஆபத்தான விளையாட்டு சென்னையில் நடப்பது அம்பலமாகியிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல்களில் கடற்கரைகளில் பதிவு செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வசதி படைத்த இந்த ஜோடிகள் ஓரிடத்தில் கூடி  தங்களது கார் சாவியை குலுக்கள் முறையில், தேர்ந்தெடுத்து கையில் சிக்கும் கார் சாவியை கொண்டு ஜோடிகளை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.  இப்போது அது நவீன வடிவம் பூண்டு டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் உதவியுடன் துணைகளை மாற்றிக்கொள்ளும் அந்த ஆபத்தான விளையாட்டு இப்போதும் நடப்பதாக சில ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.  சென்னை, ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வீடியோக்கள் கசிந்துள்ளன.

அதன்படி, பேசிலர்களாக வரும் ஆண்களும், பெண்களும் தங்களது கார் சாவிகளை மாற்றிக்கொண்டு முன்பின் அறியாமல் ஜோடிகளாக வார இறுதியான இரண்டு நாட்களும் ’குடும்பம்’நடத்தி கும்மாளமிடுகின்றனர். பேச்சிலர்கள் மட்டுமல்ல. கணவன், மனைவி இருவரும் இந்த ஹோட்டல்களுக்கு வருகின்றனர். அவர்களிருவரும் சேர்ந்து அந்த ஹோட்டல்களின் இன்பம் அனுபவித்து, பொழுதை கழித்தால் அதிர்ச்சியடையத் தேவையில்லை. கார் சாவிகளை குலுக்கல் முறையில் மாற்றி கணவன் வேறொருவருடைய மனைவியுடனும், மனைவி வேறொருவருடைய கணவருடனும் எக்ஜேஞ்ச் செய்து இரு நாட்கள் எக்ஜேஞ்ச் முறையில் ஒரே ஹோட்டலில் வெவ்வேறு நபர்களுடன் உல்லாசம் அனுபவிக்கின்றனர்.

 

அந்த ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள கடற்கரையில் அரைகுறை ஆடைகளுடன் கட்டிப்புரண்டு, கொஞ்சி குலாவும் விடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அடுத்து வார விடுமுறை முடிந்து, தங்களது, கணவன், மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகின்றனர். இந்த சீரழிவு கலாச்சாரம் எதில் கொண்டு போய் முடியப்போகிறதோ என தலையிலடித்துக் கொள்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.