முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து தற்போது தலைமை செயலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, தலைமை செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் செல்போனில் பேசினார். ஆவேசமாக பேசிய அவர் இரவு 8 மணிக்குள் தலைமைச் செயலகம் செயல்படும் சென்னை கோட்டையை மனித வெடிகுண்டு மூலம் தாக்கி தகர்ப்போம் என்றும், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் வீடுகளிலும் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறிய அந்த நபர் தனது செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து, உடனே காவல் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். சென்னை தலைமைச் செயலகம் உள்ள கோட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோட்டை வளாகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியோடு சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினார்கள். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்து செல்போனில் பேசியது கோவையைச் சேர்ந்தவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய கோவை போலீசாருக்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.