தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இன்று 5வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இன்று 5வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,07,124ஆக அதிகரித்து உள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மட்டும் 80,856 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2 கோடியே 93 ஆயிரத்து 091 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. கொரோனா உறுதியானவர்களில், 2,176 பேர் ஆண்கள், 1,469 பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,47,561 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,59,527 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,68 ,722-ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,804ஆக அதிகரித்துள்ளது. தற்போது 25,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.