தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,978 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 28,978 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 28,978 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,09,237ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 7,149 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,498ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,46,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,41,54,820 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில் 16,925பேர் ஆண்கள், 12,053 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,47,770ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,61,429ஆகவும் அதிகரித்து உள்ளது. 

இன்று மட்டும் 20,904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 12,40,968ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 232 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 98 பேர் தனியார் மருத்துவமனையிலும், 134 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15,880ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,52,389 பேர் சிகிச்சையில் உள்ளனர்.