நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் விழா நடக்கும் இடத்திற்கு வருகை தந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் ஆளுநரை வரவேற்றனர். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதன்பின், அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் இடம்பெற்றுள்ள கண்காட்சி அணிவகுப்பையும் அவர் பார்வையிட்டு வருகிறார்.