சென்னையில் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி கீதா(40). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கீதா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் மயில் வாகணன்(38) என்பவருடன் கீதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் புழல் கண்ணப்பசாமி நகர் 28வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மயில்வாகணம் வேலைக்கு சென்ற நிலையில் கீதா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

வீட்டில் வந்து பார்த்த போது கீதா தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு மயில்வாகணம் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக புழல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.