Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain: நீண்ட நாட்களுக்கு திடீரென சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை..!

கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து காணப்பட்ட நிலையில் சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Sudden heavy rain in Chennai for long days
Author
Chennai, First Published Dec 30, 2021, 1:03 PM IST

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மெரினா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. 

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை 2016ம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுப்படுத்தியது. தொடர்ந்து சென்னையில் மழை விடாமல் கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு  ஆளாகினர். இதனால், சென்னையின் எழும்பூர், வடபழனி, கொளத்தூர், வேளச்சேரி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

Sudden heavy rain in Chennai for long days

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து காணப்பட்ட நிலையில் சென்னையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மெரினா கடற்கரை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி  உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறுகையில்;- தமிழ்நாட்டில் குமரி சென்னை வரை கடலோரத்தில் 1 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. 

Sudden heavy rain in Chennai for long days

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நாகை, கடலூர், விழுப்புரம், மயிலாடுத்துறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் நாளை இடியுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்தடன் காணப்படும் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு 2 நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios