தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவரிடம், தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர்.

இந்த புகாரில் நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மே 28ஆம் தேதி நாகராஜனை கைது செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், ஜுன் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

நாகராஜனை 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.