Asianet News TamilAsianet News Tamil

Omicron: அதிர்ச்சி செய்தி.. சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்..!

கடந்த 2ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 19 நாளில் தொற்று எண்ணிக்கை 200ஐ தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

Second Omicron case detected in Andhra Pradesh
Author
Chennai, First Published Dec 22, 2021, 12:46 PM IST

கென்யாவில் இருந்து சென்னை வழியாக திருப்பதி வந்த 39 வயது பெண்ணுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஆந்திர மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. முதலில் தென்ஆப்பிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளில் பரவி உள்ளது. இது டெல்டாவை விட மிகத் தீவிரமானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Second Omicron case detected in Andhra Pradesh

கடந்த 2ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 19 நாளில் தொற்று எண்ணிக்கை 200ஐ தாண்டி உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 54 பேரும், தெலுங்கானா 24 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், ஜம்மு காஷ்மீரில் 3 பேரும், ஒடிசா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 2 பேரும், ஆந்திரா, தமிழகம், மேற்கு வங்காளம் மற்றும் சண்டிகரில் தலா ஒருவர் என மொத்தம் 220 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

Second Omicron case detected in Andhra Pradesh

இந்நிலையில், கடந்த 10ம் தேதி ஆந்திராவை சேர்ந்த 39 வயது மதிக்க தக்க பெண் கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர், சாலை மார்கமாக திருப்பதிக்கு சென்று, 12ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த குடும்படுத்தினர் 6 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. இதனையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios