தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டப்படி 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா தொற்றுப் பரவல் முற்றிலும் ஒழியாத நிலையில், பள்ளிகளைத் திறக்க பெற்றோர் மற்றும் அரிசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், ஆசிரியா் கழக நிா்வாகிகள், பெற்றோா், தனியாா் பள்ளிகள் நிர்வாகம் ஆகியோரின் கருத்துகளைக் கேட்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.