Asianet News TamilAsianet News Tamil

Private Schools: புகார் வந்தால் ஆப்பு தான்.. தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை.!

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறுதியளிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

School Education Department warns private schools
Author
Chennai, First Published Mar 24, 2022, 11:46 AM IST

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறுதியளிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் படிப்பும், மனநிலையும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது. பெற்றோரை தரக்குறைவாக பேசக்கூடாது என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. 

School Education Department warns private schools

பள்ளிகள் அதை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து உறுதி மொழி சான்று தர அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. உறுதிமொழி சான்று தந்த பிறகும் அந்த பள்ளிகள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios