முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனின் பெரியப்பா தியாகராஜன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானதைத் தொடர்ந்து முதல்வர் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளான செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். இவர், அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிழல் போன்று செயல்பட்டு பல்வேறு பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சபரீசனின் பெரியப்பாவான தியாகராஜன் உடல் நலகக் குறைவு காரணமாக் இன்று உயிரிழந்தார். சென்னை கொட்டிவாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஆகியோரும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Asianetnews Tamil as a Preferred Source

