கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருக்கும் நிலையில் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 76.09 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 70.15 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். விலை குறைய கூட வேண்டாம், மீண்டும் மீண்டும் உயராமல் இருந்தாலே போதும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.