தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
தமிழகத்தில் 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3,562 பேர் பங்கேற்றார்கள். இந்த முதல்நிலைத் தேர்வில் பொது பிரிவினர் 60 மதிப்பெண்களும் பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்றும் பிற்படுத்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

.
இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரதான தேர்வு மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் தேர்வு முடிவு  வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்ற 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அனைவரும் தோல்வியடைந்துவிட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் மிகவும் கடினமாகவும் மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எழுத்துத் தேர்வில் ஒருவரும் தேர்ச்சி பெறாததால், பிரதான தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாகிவிட்டது.