குதிரைகளுக்கும், அதன் பராமரிப்பாளர்களுக்கும் நிவாரணப்பொருட்கள் கொடுத்து உதவி செய்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Minister Udhayanidhi Stalin who helped the horses and their keepers by providing relief materials-rag

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட கடுமையான ஈடு செய்யும் வகையில், இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்தது.

இந்த புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Minister Udhayanidhi Stalin who helped the horses and their keepers by providing relief materials-rag

இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள பதிவில், “நம் சேப்பாக்கம் தொகுதியில், புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கும் - அவற்றின் உரிமையாளர்கள்  & பராமரிப்பாளர்களுக்கும் உதவிடும் முயற்சியாக, தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் முன்னெடுப்பில் 200 குதிரைகளுக்கு தலா 136 கிலோ குதிரை உணவுப்பொருட்களை இன்று வழங்கினோம். 

குதிரைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிப் பெட்டகத்தையும் வழங்கினோம். இந்த நிகழ்வின் போது, குதிரைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்ளுக்கு மழைக்கால நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களுக்கு துணை நிற்போம் என்று உறுதியளித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios