234 தொகுதிகள்.. திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் & திட்டங்களை கூறும் மக்களுடன் ஸ்டாலின் செயலி

திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளையும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Makkaludan Stalin app that tells the achievements of Dravidian model-rag

நூற்றாண்டுகளை கடந்த வரலாற்று பெருமை மிக்கது திராவிட இயக்கம், அதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு 75 ஆண்டில் பவளவிழா காண்கின்றது. இத்தகைய பெருமைமிகு இயக்கத்தின் வரலாற்று நிகழ்வுகளையும், சமூக மாற்றத்தை நிகழ்த்திய மக்கள் நலத் திட்டங்களையும், தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் திராவிட மாடல் அரசு நிகழ்த்தி வரும் சாதனைகளையும் இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும், தமிழ்நாட்டிற்கான பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்க மாண்புமிகு முதலமைச்சர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட அன்றாட முன்னெடுப்புகள். ஊடகங்களில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை பாராட்டி வரும் செய்திகள், கழகத் தலைவரின் சமூக வலைத்தள பதிவுகளையும், சாதனை சொல்லும் காணொலிகளும் உடனுக்குடன் ஒரே தளத்தில் உடன்பிறப்புகள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது. 

பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடும் ‘உங்களில் ஒருவன்’ தொடரில், மக்களுடன் ஸ்டாலின் செயலி பயனர்களும் பங்கேற்கும் வகையில் உங்களில் ஒருவன் என்ற  பகுதியும் செயலில் இடம் பெற்றுள்ளது. 

மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் ஆயிரக்கணக்கான திட்டங்களில், பொது மக்கள் தங்களுக்கான திட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் பயனடைவதற்கான வழிமுறைகளும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பம்சம் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் உங்கள் தொகுதியை தெரிந்துகொள்ளுங்கள் பகுதியும் அமைந்துள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் நடந்த திமுகவில் முப்பெரும் விழாவில் தொடங்கப்பட்ட இந்த செயலி இன்று கழகத்தினரிடையே தேர்தல் பரப்புரையில் திராவிட மாடல் அரசின் சாதனை சொல்லும் ஒரு ஆயுதமாக உருவாகி வருகிறது.  மக்களுடன் ஸ்டாலின் செயலியை சிறப்பாக பயன்படுத்தும் பயனாளர்களுக்கு தலைவர் கையொப்பமிட்ட டி-சர்டகள், திராவிட கொள்கை சொல்லும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்படுகிறது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios