Asianet News TamilAsianet News Tamil

கொட்டித் தீர்க்கும் கன மழை... அடுத்தடுத்து விடுமுறை அறிவித்த கலெக்டர்கள்.. உங்கள் மாவட்டத்துக்கு விடுமுறையா?

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு 9, 10 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையிலும், அதனைச் சுற்றியுளள மாவட்டங்களிலும் மீண்டும் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Heavy rain pouring down ... Collectors announcing consecutive holidays .. Holidays for your district?
Author
Chennai, First Published Nov 9, 2021, 8:32 AM IST

தமிழகத்தில் கன மழை தொடரும் நிலையில் 16 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.Heavy rain pouring down ... Collectors announcing consecutive holidays .. Holidays for your district?

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிடமடைந்துள்ளது. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் 25 செ.மீ. அளவுக்கு இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், சென்னை நகரமே வெள்ளக் காடாயினது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் வடக்கு, மத்திய, தென் மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு 9, 10 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையிலும், அதனைச் சுற்றியுளள மாவட்டங்களிலும் மீண்டும் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இரு தினங்களுக்கு விடுமுறையை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இந்த 4 மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை தொடர்கிறது. மேலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழையைப் பொறுத்து விடுமுறை அளிப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.Heavy rain pouring down ... Collectors announcing consecutive holidays .. Holidays for your district?

இதன்படி மழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம். விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios