தென் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் கேரளாவில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தில் இதன்காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மாநிலத்தின் முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தநிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு நோக்கி வீசும் காற்று காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் தென் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் கேரளாவில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தில் இதன்காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் கனமழை பெய்யும் என்றும் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்னர்.