சென்னையில் கடும் பனிமூட்டம்.. விமானம் தரையிறங்குவதில் தாமதம்.. சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்..!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Heavy fog in Chennai...Flight delay in landing

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணிவரை கடுமையான பனிமூட்டம் நிலவியதை அடுத்து முகப்பு விளக்கை எரியவிட்ட படியே வாகனங்கள் சென்றன. 

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்  இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 

Heavy fog in Chennai...Flight delay in landing

இந்நிலையில், கடுமையான பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும்  ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios