Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. மீறினால் ஆப்பு தான்.. போக்குவரத்துறை எச்சரிக்கை.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் விஷயத்தில் போக்குவரத்துறை அமைச்சர் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே, தரமற்ற ஓட்டல்களில் பேருந்துகள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, தரமான உணவகங்களில் நிறுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் இடைய பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Government bans bus drivers from using cell phones...Transportation Department
Author
Chennai, First Published Feb 7, 2022, 11:59 AM IST

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த போக்குவரத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் விஷயத்தில் போக்குவரத்துறை அமைச்சர் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே, தரமற்ற ஓட்டல்களில் பேருந்துகள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, தரமான உணவகங்களில் நிறுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் இடைய பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Government bans bus drivers from using cell phones...Transportation Department

இது தொடர்பாக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது.

Government bans bus drivers from using cell phones...Transportation Department

ஓட்டுநர்கள் பணியின் போது சட்டையின் மேல் பாக்கெட்டில் செல்போன் வைத்திருக்க கூடாது. அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு பணி முடிவடைந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். நடத்துநர் பகல் நேரங்களில் முன் இருக்கையில் அமராமல் பின்புறம் கடைசி இருக்கையில் அமர்ந்து இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும். பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios