திருமணமான இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை... என்ன காரணம் தெரியுமா?

சென்னை திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்ந்தவர் ஹரிபாபு (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

Fight with husband...young women suicidse in chennai

சென்னையில் திருமணமான இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்ந்தவர் ஹரிபாபு (24). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜெயந்தி (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஜெயந்தி தனது அறைக்குள் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து தட்டியுள்ளனர்.  இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின்விசிறியில் ஜெயந்தி சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

Fight with husband...young women suicidse in chennai

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சமீப காலமாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், மன உளைச்சலில் இருந்த ஜெயந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios