Asianet News TamilAsianet News Tamil

21 மாவட்டங்களில் இன்று ஒரு பாதிப்பு கூட இல்ல.. கட்டுக்குள் வந்த கொரோனா.. மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழ்நாட்டில் இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. 
 

district wise corona cases list in tamil nadu on may 13
Author
Chennai, First Published May 13, 2020, 9:01 PM IST

தமிழ்நாட்டில் இன்று 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 9227ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 380 பேர் பாதிக்கப்பட்டதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 5262ஆக உயர்ந்துள்ளது. 

இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 129 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. ஏனெனில், கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கடந்த சில தினங்களாக திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தாறுமாறாக அதிகரித்தது. 

இந்நிலையில் இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 129 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமே 25 தான். திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் இன்று அதிகபட்சமாக(சென்னைக்கு அடுத்து) தலா 25 பேருக்கு தொற்று உறுதியானது.

அதேவேளையில், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று ஒரு பாதிப்பு கூட உறுதியாகவில்லை. 

district wise corona cases list in tamil nadu on may 13

ஈரோடு, திருப்பூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுவிட்ட நிலையில், கோவையில் கடந்த பல நாட்களாகவே ஒருவருக்கு கூட தொற்று இல்லை.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலுர் - 348

செங்கல்பட்டு - 416

சென்னை - 5262

கோவை - 146

கடலூர் - 413

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 111

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 61

காஞ்சிபுரம் - 160

கன்னியாகுமரி - 26

கரூர் - 54

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 123

நாகப்பட்டினம் - 47

நாமக்கல்  - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 133

புதுக்கோட்டை - 6

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 76

சேலம்  - 35

சிவகங்கை - 12

தென்காசி - 53

தஞ்சாவூர் - 70

தேனி - 71

திருப்பத்தூர் - 28

திருவள்ளூர் - 492

திருவண்ணாமலை - 138

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 36

திருநெல்வேலி - 98

திருப்பூர் - 114

திருச்சி - 67

வேலூர் - 34

விழுப்புரம் - 306

விருதுநகர் - 44.
 

Follow Us:
Download App:
  • android
  • ios