Asianet News TamilAsianet News Tamil

இங்க பாருங்க எவனாவது கஞ்சா குட்கா விற்பனை செய்தால் ஆப்பு தான்.. டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை.!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கஞ்சா, குட்கா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க, மொத்த கொள்முதல், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

DGP Sylendra Babu Warning
Author
Chennai, First Published Mar 29, 2022, 11:22 AM IST

தமிழ்நாட்டில் கஞ்சா / குட்கா விற்பனையில் ஈடுபடுவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆபரேசன் 2.0 கஞ்சா வேட்டை

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 திட்டம் நேற்று தொடங்கிய நிலையில், காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் கஞ்சா, குட்கா கடத்தல், பதுக்கல் சங்கிலியை ஒழிக்க, மொத்த கொள்முதல், விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபரேஷன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதை உடனடியாக தடுக்கவும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

DGP Sylendra Babu Warning

கடத்தல் பதுக்கல் விற்பனை சங்கிலி

கஞ்சா குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே வசிப்பவர்களை கொண்டு வாட்ஸ் அப் குழு உருவாக்கி ரகசிய தகவல்களை சேகரிக்கவும், பார்சல் மூலம் போதை மாத்திரை, போதைப்பொருள் விற்பவர்களை தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும். சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் கஞ்சா ஒழிப்பு பணியில் நேரடி கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios