சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பெண் மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வந்த பெண் மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை பாடி சிடிஎச் சாலை மேம்பாலம் அருகே பிரபல துணிக்கடை உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த சசிரேகா(23) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பாடி பாலாஜி நகரில் உள்ள துணிக்கடைக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் சசிரேகாவுக்கு உடல்வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

இதுகுறித்து சசிரேகாவின் தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின்படி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் வலி மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்படுவதால் பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.