Asianet News TamilAsianet News Tamil

இந்த 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று 10 மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Convection and Atmospheric overlay circulation 10 district receive heavy rain
Author
Chennai, First Published Jun 3, 2021, 2:37 PM IST

வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Convection and Atmospheric overlay circulation 10 district receive heavy rain

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Convection and Atmospheric overlay circulation 10 district receive heavy rain

நாளை மறுநாள் (05.06.2021) டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும், அடுத்த இரு தினங்களுக்கு (06.06.2021,07.06.2021) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்  என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Convection and Atmospheric overlay circulation 10 district receive heavy rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 5ம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios