சென்னை விமான நிலையத்தில் திடீர் துப்பாக்கி சத்தம்.. ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சிஐஎஸ்எப் வீரர்.!

சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் யஸ்பால் (26) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

CISF soldier commits suicide at Chennai airport

சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் யஸ்பால் (26) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருப்பவா் யஸ்பால் (26) ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்தவா். இவா் 2017 ஆம் ஆண்டில் பணியில் சோ்ந்துள்ளார். யஸ்பால் கடந்த சில காலமாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார்.

CISF soldier commits suicide at Chennai airport

இந்நிலையில், இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கழிப்பறைக்குள் சென்று திடீரென தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதால் விமான நிலையமே பரபரப்பானது. இதனையடுத்து, கழிவறையில் சென்று பார்த்த போது யஸ்பால் ரத்த வெள்ளளத்தில் உயிரிழந்து கிடந்தார். 

CISF soldier commits suicide at Chennai airport

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் யஸ்பால் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios