சென்னையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவர், அதே பகுதியை சேர்நத் 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சிறுமி தற்போது 10 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்கிடையே சிறுமிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அவரது உறவினர்கள் எழும்பூரில் உள்ள மகப்பேர் மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் விசாரணை நடத்திய போது, சிறுமிக்கு திருமணம் நடக்காமல் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.