வெஜ் ஹோட்டலில் சிக்கன் ரைஸ் கேட்டு அடாவடி! சரமாரியாக தாக்கிக்கொண்ட காவலர்கள் - ஊழியர்கள்! சிசிடிவி காட்சி.!

சைவ உணவகத்துக்கு நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்களான ரவி மற்றும் தமிழ்செல்வம் மப்டியில் மதுபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று ஊழியர்களிடம் சிக்கன் ஃபிரைடு ரைஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

chicken rice at vegetarian restaurant.. Two Armed Reserve constable hotel staff fight

தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு ஆயுத படை காவலர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா சைவ உணவகத்துக்கு நேற்று இரவு தாம்பரம் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்களான ரவி மற்றும் தமிழ்செல்வம் மப்டியில் மதுபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சென்று ஊழியர்களிடம் சிக்கன் ஃபிரைடு ரைஸ் கேட்டதாக கூறப்படுகிறது.

chicken rice at vegetarian restaurant.. Two Armed Reserve constable hotel staff fight

அதற்கு அங்கிருந்த ஊழியர் இது சைவ உணவகம் இங்கு அசைவம் கிடையாது என கூறியுள்ளார். அப்போது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த உணவக உரிமையாளர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

chicken rice at vegetarian restaurant.. Two Armed Reserve constable hotel staff fight

அதில், முதலில்  உணவக பணியாளர்கள் முதலில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios